தண்டவாளத்தில் மண் சரிவு - நீலகிரி மலை ரெயில் ரத்து


தண்டவாளத்தில் மண் சரிவு - நீலகிரி மலை ரெயில் ரத்து
x
தினத்தந்தி 18 May 2024 11:09 AM GMT (Updated: 18 May 2024 12:15 PM GMT)

தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டதன் காரணமாக நீலகிரி மலை ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி,

தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டதன் காரணமாக, நீலகிரி மலை ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கல்லாறு மற்றும் ஹில் குரோவ் ரெயில் நிலையங்களுக்கிடையே தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான மலை ரெயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்று மலை ரெயிலில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழு கட்டணமும் திரும்ப அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story