திருப்பதியில் அலைமோதும் கூட்டம்- 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்


திருப்பதியில் அலைமோதும் கூட்டம்- 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள்  தரிசனம்
x

தொடர் விடுமுறையால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 5 கி.மீ. நீள வரிசையில் 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்கிறார்கள்.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ்சில் உள்ள அறைகள் முழுவதிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கிருஷ்ண தேஜாவிலிருந்து ஷீலா தோரணம் வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.அலிப்பிரி சோதனை சாவடியில் சோதனைக்காக வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நேற்று மதியம் முதல் மாலை வரை பலத்த காற்றுடன் மழை பெய்தது. பக்தர்கள் மழையில் நனைந்ததால் குளிரில் நடுங்கியபடி அவதி அடைந்தனர். திருப்பதியில் நேற்று 71,510 பேர் தரிசனம் செய்தனர். 43,199 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.63 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று காலையில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்தது.


Next Story