எலோர்டா கோப்பை: இந்திய குத்து சண்டை வீராங்கனைகள் 4 பேர் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்


எலோர்டா கோப்பை: இந்திய குத்து சண்டை வீராங்கனைகள் 4 பேர் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்
x

நடப்பு உலக சாம்பியனான நிகத் ஜரீன் உடன் மீனாட்சி (48 கிலோ), அனாமிகா (50 கிலோ) மற்றும் மணீஷா (60 கிலோ) ஆகிய 3 இந்திய வீராங்கனைகளும் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

அஸ்தானா,

கஜகஸ்தான் நாட்டின் அஸ்தானா நகரில் 2024-ம் ஆண்டுக்கான எலோர்டா கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், பெண்கள் பிரிவில் இந்திய குத்து சண்டை வீராங்கனைகள் 4 பேர் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

நடப்பு உலக சாம்பியனான நிகத் ஜரீன், 52 கிலோ எடை பிரிவில், கஜகஸ்தானின் வீராங்கனை தோமிரிஸ் மிர்ஜாகுல் என்பவரை எதிர்கொண்டார். இதில், 5-0 என்ற புள்ளி கணக்கில் ஜரீன் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

அவருடன் மீனாட்சி (48 கிலோ), அனாமிகா (50 கிலோ) மற்றும் மணீஷா (60 கிலோ) ஆகிய 3 இந்திய வீராங்கனைகளும் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

இந்த போட்டியில், மீனாட்சி மற்றும் மணீஷா ஆகிய இருவரும் முறையே குல்னாஸ் பரிபயேவா மற்றும் தங்கதர் ஆசிம் ஆகியோரை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினர்.

அனாமிகாவுடனான போட்டியின்போது, எதிரில் விளையாடிய கஜகஸ்தான் வீராங்கனை குல்நார் துராப்பே 3 முறை எச்சரிக்கை விடுத்த பின்னரும் அனமிகாவை தொடர்ந்து இறுக பிடித்து கொண்டு இருந்த சூழலில், அவர் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், அனாமிகா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.


Next Story