'அரண்மனை 4' - தமன்னாவின் புகைப்படங்கள் வைரல்


அரண்மனை 4 - தமன்னாவின் புகைப்படங்கள் வைரல்
x

image courtecy:twitter@tamannaahspeaks

நடிகை தமன்னா தனது எக்ஸ் பக்கத்தில் படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

சென்னை,

சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அரண்மனை 3'. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருந்த இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் முந்தைய மூன்று பாகங்களில் நடித்துள்ள சுந்தர்.சி இந்த பாகத்திலும் நடித்துள்ளார். மேலும் இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் 'அச்சச்சோ' என்ற முதல் பாடலும் வெளியாகின.

இந்நிலையில், நடிகை தமன்னா தனது எக்ஸ் பக்கத்தில் படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை பகிந்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அதனுடன் பகிர்ந்த பதிவில், அரண்மனை 4 படத்தில் நடிப்பது மிகவும் சவாலாக இருந்தது. ஆனாலும் மகிழ்ச்சியாக இருந்தது. எல்லா சண்டைகாட்சிகளிலும் நடித்தேன். இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் சந்தோஷம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Next Story