தூக்கு தண்டனைக்கு எதிராக கிளர்ந்தெழும், ‘ஆதியோகி சிங்கை எம்.ரவி!’


தூக்கு தண்டனைக்கு எதிராக கிளர்ந்தெழும், ‘ஆதியோகி சிங்கை எம்.ரவி!’
x
தினத்தந்தி 26 Nov 2021 9:12 AM GMT (Updated: 26 Nov 2021 9:12 AM GMT)

தூக்கு தண்டனைக்கு எதிராக ஒரு படம் உருவாகிறது. ஒளிப்பதிவாளர் பிரேம் லி, இந்த படத்தை இயக்குகிறார்.

படத்தை பற்றி அவர் சொல்கிறார்:

‘‘தூக்கு தண்டனையை மனிதநேய மீறல் என்று சொல்லும் திரைக்கதை, இது. படத்துக்கு ஆதியோகி சிங்கை எம்.ரவி, என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. உலகம் முழுவதும் மரண தண்டனைக்கு எதிராக போராடும் சர்வதேச மனித உரிமை வழக்கறிஞர் சிங்கப்பூர் தமிழரான ஆதியோகி சிங்கை எம்.ரவி என்பவர். இவர் எழுதிய புத்தகங் களின் உண்மையை தழுவி, இந்த படம் உருவாகிறது.

நீதியை நிலைநாட்டிய தமிழ் கலாசார பாரம்பரியம், நல்லொழுக்க வாழ்க்கை முறை, மன்னர்கள் நீதியுடன் ஆட்சி புரிந்தது ஆகியவற்றை அடிப்படையாக வைத்து திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. மரண தண்டனைக்கு எதிராக போராடும் ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில், கதையின் நாயகனாக ஆதியோகி சிங்கை எம்.ரவி நடிக்கிறார்.

படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி சிங்கப்பூர், மலேசியா, நைஜீரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.’’


Next Story