உறவுகளை நிலைத்திருக்கச் செய்யும் வழிகள்


உறவுகளை நிலைத்திருக்கச் செய்யும் வழிகள்
x
தினத்தந்தி 4 April 2022 5:30 AM GMT (Updated: 2 April 2022 1:09 PM GMT)

நீண்ட தூர உறவில், பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும்போது பெரும்பாலான பிரச்சினைகள் ஏற்படும். அதனால் உங்களுக்கு அதிகமான வேளைப் பளு இருந்தாலோ அல்லது வெளியே செல்லும் போதோ அதை முன்கூட்டியே உங்கள் துணையிடம் கூறிவிடுங்கள்.

ற்போது வேலை நிமித்தமாக பல தம்பதிகள் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து தனியாக வாழும் சூழல் அதிகரித்திருக்கிறது. கணவன் வெளிநாட்டில் வாழ, மனைவி இங்கே அவருக்காக காத்திருக்கலாம் அல்லது மனைவிக்காக கணவன் தொலைதூரத்தில் காத்துக் கொண்டிருக்கலாம். அடிக்கடி நேரில் பார்த்து பேசவோ அல்லது சில நாட்கள் சேர்ந்து இருக்கவோ முடியாத சூழ்நிலையில் தொலைபேசியில் மட்டுமே உரையாடிக் கொண்டிருப்பார்கள். இவ்வாறான சூழ்நிலையில் சில காரணங்களால் தொலை தூர உறவில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

தகவல் பரிமாற்ற செயலிகள் மூலம் மட்டுமே தங்கள் உணர்வுகளை பரிமாறிக்கொள்ளும்போது, சில தகவல்களை தவறாகப் புரிந்துகொள்ள நேரிடலாம். இதன் மூலம் உறவுகளுக்கிடையே தவறான புரிதல் ஏற்படலாம். இதைத் தவிர்க்க வேண்டுமெனில், எந்த விஷயத்தையும் தெளிவாகச் சொல்ல வேண்டும். 
 ஒருவேளை உங்களுக்கு, உங்கள் துணை பரிமாறிய தகவலின் கருத்து புரியவில்லையெனில், நீங்களே ‘இப்படித்தான் இருக்கும்’ என்று யூகித்துக் கொள்ளாமல், உங்கள் துணையிடம் தெளிவுபடுத்திக் கொள்வது சிறந்தது.

துணை தூரத்தில் இருக்கும்போது கருத்து வேறுபாடுகள் நிகழும்போது, தான் செய்தது தவறு என்று உணர்ந்து மன்னிப்பு கேட்கையில் அவர்கள் உங்கள் கண்களை பார்த்து பேச முடியாது. 
 அப்போது உண்மையாகவே மன்னிப்பு கேட்டாலும், ‘பொய்யாகக் கேட்கிறார்கள்’ என்று யோசிக்கத் தோன்றும்.  அத்தகைய சூழ்நிலையில் துணைமேல் இருக்கும் நம்பிக்கையை இழக்காதீர்கள். மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். மீண்டும் நேரில் சந்திக்கும்போது அதைப்பற்றி பேசாதீர்கள்.

நீண்ட தூர உறவில், பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும்போது பெரும்பாலான பிரச்சினைகள் ஏற்படும். அதனால் உங்களுக்கு அதிகமான வேளைப் பளு இருந்தாலோ அல்லது வெளியே செல்லும் போதோ அதை முன்கூட்டியே உங்கள் துணையிடம் கூறிவிடுங்கள். 
 ஏனெனில் உங்கள் துணை அழைக்கும்போது, நீங்கள் அழைப்பை ஏற்கவில்லை என்றாலோ அல்லது வெளியே செல்வதை சொல்லாமல் சென்றபோது அழைப்பை கவனிக்கவில்லை என்றாலோ உங்கள் துணை பாதுகாப்பற்ற தன்மையை உணரலாம்.

உறவில் ஏற்படும் சின்னச் சின்ன சண்டைகளில் இருந்து ஏதோ ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் துணையை நன்றாகப் புரிந்துகொள்ள முயலுங்கள். எந்த விஷயம் அவர்களை கோபப்படுத்துகிறது?, எதனால் சண்டை வருகிறது? என்பதை புரிந்துகொண்டு, அதைத் தவிர்க்க முயலுங்கள். சண்டை ஏற்பட்டால் இருவரும் பேசாமல் இருப்பது உறவை மேலும் பலவீனப்படுத்தும். 
 ஒருவருக்கொருவர் பக்கத்தில் இல்லை என்ற வருத்தம் இருவருக்கும் இருக்கும். தனியாக இருக்கும்போது ஏதேதோ விஷயங்களை நினைத்துக் கொண்டு மனதை குழப்பிக் கொள்வோம். அதனால் சண்டை முடிந்து, இருவரும் அமைதி நிலைக்கு வந்தபின் மீண்டும் இயல்பாக பேசுங்கள். 

Next Story