பாரம்பரிய பழக்கவழக்கங்களும்.. அறிவியல் பின்னணிகளும்..!


பாரம்பரிய பழக்கவழக்கங்களும்.. அறிவியல் பின்னணிகளும்..!
x
தினத்தந்தி 11 April 2022 5:30 AM GMT (Updated: 9 April 2022 9:41 AM GMT)

இறுக்கமான உடைகளை அணியும்போது கர்ப்பப்பையின் வெப்பம் அதிகரித்து நீர்க்கட்டிகள் தோன்றி பல பிரச்சினைகள் உண்டாகும்.

யற்கையோடு இணைந்து வாழ்ந்த காரணத்தால், தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்திலேயே, நமது முன்னோர்கள் பல விஷயங்களைக் கண்டறிந்தனர். நன்மைகளைத் தரக்கூடிய அவற்றை பழக்கவழக்கங்களாக மாற்றி பின்பற்றி வந்தனர். நாகரிக உலகத்தில் வாழும் நாம், அவற்றின் அறிவியல் பின்னணியைத் தெரிந்துகொண்டால் தலைமுறைகள் தாண்டியும் பின்பற்ற முடியும். அதன் தொகுப்பு இதோ…

மெட்டி அணிதல்
திருமணமான பெண்கள் மெட்டி அணிவது சடங்குக்காக மட்டுமல்ல, அதன் பின்னணியில் ஆக்கப்பூர்வமான அறிவியலும் இணைந்துள்ளது. கால் நடு விரலில் உள்ள நரம்பானது பெண்களின் கருப்பையில் இணைந்து, தொடர்ந்து இதயத்தின் வழியே செல்கிறது. எனவே இவ்விரலில் மெட்டி அணிவதன் மூலம் ரத்த ஓட்டம் சீராக நடைபெற்று, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்க வழி செய்கிறது.

பொட்டு வைத்தல்
பொட்டு வைப்பதால் இரு புருவங்களுக்கும் இடையே ஆற்றல் சமநிலை ஏற்பட்டு நினைவாற்றலும், கவனிக்கும் திறனும் அதிகரிக்கும். ரத்த ஓட்டம் சீராகி, முகத் தசைகள் பொலிவடைந்து சுருக்கங்கள் நீங்கும்.

பாவாடை தாவணி அணிதல்
காலமாற்றத்தால் மேற்கத்திய உடைகளின் மீது நமக்கு ஈர்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால், நமது பாரம்பரிய உடையான பாவாடை தாவணி மற்றும் சேலை போன்றவை அழகை அதிகரித்துக் காட்டுவதோடு, ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடியவை. பருவமடைந்த பெண்களுக்கு தொப்புளைச் சுற்றியுள்ளப் பகுதி உஷ்ணமாகாமல், காற்றோட்டமாக இருக்க வேண்டும் என்பதே இந்த உடைகள் அணிவதற்கான காரணம். இதன் மூலம் கர்ப்பப்பையின் சூடு அதிகரிக்காமல் சீராக இயங்கும்.

இறுக்கமான உடைகளை அணியும்போது கர்ப்பப்பையின் வெப்பம் அதிகரித்து நீர்க்கட்டிகள் தோன்றி பல பிரச்சினைகள் உண்டாகும்.

கண்ணாடி வளையல் அணிதல்
கண்ணாடி வளையல் அணிவது பெண்கள் அனைவருக்குமே நல்லது. கர்ப்பிணி பெண்கள் அணியும் போது கிடைக்கும், அவர்களின் ரத்த ஓட்டம் அதிகரித்து குழந்தைக்கு நேர்மறை ஆற்றல் கிடைக்கும். இதனால் கருவில் உள்ள குழந்தையின் மூளை சுறுசுறுப்புடன் செயல்படும், கேட்கும் திறன் அதிகரிக்கும்.

மருதாணி இடுதல்
இயற்கை தந்த அருமருந்தான மருதாணியை கை, கால்களில் வைப்பதன் மூலம் உடல் உஷ்ணம் குறைந்து குளிர்ச்சியடையும். கால்களில் வைப்பதால் பித்த வெடிப்பு ஏற்படாது. சருமப் பிரச்சினைகள் நீங்கும்.

மேற்குறிப்பிட்ட பழக்கங்கள் மட்டுமின்றி, பாரம்பரியமாக பின்பற்றி வரும் பல பழக்கவழக்கங்களும், பல்வேறு வகையான அறிவியல் பின்னணிகளை கொண்டுள்ளன. எனவே நம்மால் முடிந்தவரை முன்னோர்கள் ஏற்படுத்தித் தந்த பழக்கவழக்கங்களை பின்பற்றுவோம். 

Next Story