ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியின் போது உயிரிழந்த ஆசிரியர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி


ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியின் போது உயிரிழந்த ஆசிரியர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
x
தினத்தந்தி 6 Dec 2021 10:22 AM GMT (Updated: 6 Dec 2021 10:22 AM GMT)

ஆசிரியர் கூட்டணியின் சார்பில் வாலாஜாபாத் வட்டார ஆசிரியர்கள் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் இணைந்து ரூ.5 லட்சம் நிதியுதவியை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார்கள்.

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் நெய்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தவர் ஹரி (வயது 48). இவர் கடந்த மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தல் பணிக்கு சென்றிருந்தார். தேர்தல் பணியின் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்தநிலையில் அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் வாலாஜாபாத் வட்டார ஆசிரியர்கள் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் இணைந்து ரூ.5 லட்சம் நிதியுதவியை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார்கள்.

தேர்தல் பணியின் போது உயிரிழந்த ஆசிரியர் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை செய்து தருவதற்கான நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story