ஆவடியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி நிறைவு விழா


ஆவடியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி நிறைவு விழா
x
தினத்தந்தி 7 Dec 2021 9:13 AM GMT (Updated: 7 Dec 2021 9:13 AM GMT)

ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி வளாகத்தில் பயிற்சி பெற்ற 115 பேருக்கு நேற்று பயிற்சி நிறைவு விழா நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக டி.ஐ.ஜி. தினகரன் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 115 பேர் இந்த பயிற்சி மையத்தில் காவலர் பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு 44 வாரங்கள் உடற்பயிற்சி, ஆயுதபயிற்சி, துப்பாக்கி பயிற்சி, தூரப்பயணம் பயிற்சி, நிர்வாக பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 

பயிற்சியை நிறைவு செய்த 115 பேரும் காஷ்மீர், ஜார்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்த விழாவில் டி.ஐ.ஜி. கேவல்சிங், கமாண்டன்ட் அசோக் ஸ்வாமி, இணை கமாண்டன்ட் சந்திரசேகர், சரவணன், உமாநாத், துணை கமாண்டன்ட் விஜயகுமார், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story