சுவீடன், இத்தாலி நாட்டில் இருந்து சென்னை வந்த சிறுமி, பெண்ணுக்கு ஒமைக்ரான் பாதிப்பா?


சுவீடன், இத்தாலி நாட்டில் இருந்து சென்னை வந்த சிறுமி, பெண்ணுக்கு ஒமைக்ரான் பாதிப்பா?
x
தினத்தந்தி 24 Dec 2021 9:16 AM GMT (Updated: 24 Dec 2021 9:16 AM GMT)

சுவீடன், இத்தாலி நாட்டில் இருந்து வந்த சிறுமி, பெண்ணுக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறிய மரபணு சோதனைக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒமைக்ரான் தொற்று காரணமாக வெளிநாடுகளில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்துக்கு வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் கொரோனா தொற்று இருப்பவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தொற்று இல்லை என வந்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டனர்.

இந்தநிலையில் சுவீடன் நாட்டில் வாழும் செங்கல்பட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் விடுமுறைக்காக கத்தார் வழியாக சென்னை வந்தனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தந்தை, தாய், சகோதரருக்கு தொற்று இல்லை. ஆனால் 10 வயது சிறுமிக்கு தொற்று இருப்பது தெரிந்தது. உடனடியாக சிறுமியை கிண்டி கொரோனா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தந்தை உள்பட 3 பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அதேபோல் இத்தாலியில் இருந்து தோகா வழியாக சென்னை வந்த மேடவாக்கத்தைச் சேர்ந்த 30 வயது இளம்பெண்ணுக்கும் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. அவரும் கிண்டி கொரோனா ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

கொரோனா பாதிப்புக்குள்ளான சிறுமி, இளம்பெண் இருவருக்கும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறிய மரபணு சோதனைக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story