பிரதான குழாயின் தரம் பரிசோதிக்கும் பணி காரணமாக காசிமேடு பகுதிகளில் குடிநீர் நிறுத்தம்


பிரதான குழாயின் தரம் பரிசோதிக்கும் பணி காரணமாக காசிமேடு பகுதிகளில் குடிநீர் நிறுத்தம்
x
தினத்தந்தி 4 March 2022 9:22 AM GMT (Updated: 4 March 2022 9:22 AM GMT)

சென்னை குடிநீர் வாரியத்தால் அண்ணா பூங்கா நீரேற்று நிலையத்தில் குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குழாயின் தரத்தை பரிசோதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பணி காரணமாக பழைய வண்ணாரப்பேட்டை, காசிமேடு பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதனால் ராயபுரம், பழைய வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை மற்றும் காசிமேடு ஆகிய பகுதிகளுக்கு இன்று(வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் நாளை(சனிக்கிழமை) காலை 8 மணி வரை குழாய் மூலமாக வழங்கும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம். 5-வது பகுதி பொறியாளர் செல்போன் எண் 81449-30905 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையலாம்.

சென்னை குடிநீர் வாரியத்தின் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, கட்டணங்கள் பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள், தலைமை அலுவலகத்தில் வசூல் மையம் மற்றும் இணையதளம் வாயிலாக வரி மற்றும் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. வாரியத்தில் மென்பொருள் பராமரிப்பு பணிகள் இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 6-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது. வரி செலுத்துவோர் மற்றும் நுகர்வோர்கள் தங்களது குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, கட்டணங்களை தலைமை அலுவலகத்திலோ, பகுதி அலுவலகங்களிலோ, பணிமனை அலுவலகங்களிலோ அல்லது இணைய வழியிலோ செலுத்த இயலாது. நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு, வருகிற 7-ந் தேதி(திங்கட்கிழமை) முதல் வழக்கம் போல் கட்டணங்களை செலுத்தலாம் என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.


Next Story