‘இளைய தலைமுறையினருக்கு தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி அவசியம்’- போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு


‘இளைய தலைமுறையினருக்கு தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி அவசியம்’- போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு
x
தினத்தந்தி 7 March 2022 9:58 AM GMT (Updated: 7 March 2022 9:58 AM GMT)

இளைய தலைமுறையினர் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக சட்டம்-ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று காலை உடற்பயிற்சிக்காக சென்னையிலிருந்து சைக்கிளில் பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் வழியாக இருங்காட்டுக்கோட்டை சென்றார். அங்கு நடைபெற்ற மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். மீண்டும் அங்கிருந்து திருமழிசை, வெள்ளவேடு, அரண்வாயல் வழியாக மணவாளநகர் வரை சைக்கிளில் வந்து மீண்டும் சென்னைக்கு புறப்பட்டார். அப்போது புதுச்சத்திரம் அருகே சாலையோரம் உள்ள கடையில் கரும்பு ஜூஸ் வாங்கி குடித்தார்.

பின்னர் நிருபர்களிடம் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறும்போது, “தமிழ்நாடு காவல்துறை சைக்கிள் வீரர்களுடன் ஞாயிற்றுக்கிழமைகளில் 100 கிலோமீட்டர் தொலைவுக்கு சைக்கிள் பயிற்சி செய்து வருகிறேன். 4 மணி நேரம் சைக்கிள் பயிற்சி செய்வது அடுத்த 12 மணி நேரத்துக்கு கடுமையாக உழைப்பதற்கு உபயோகமாக இருக்கிறது. தற்போது இளைய தலைமுறையினர் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் ” என்றார்.


Next Story