நாட்டில் பெரும்பாலானோருக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை - ராகுல்காந்தி


நாட்டில் பெரும்பாலானோருக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை - ராகுல்காந்தி
x
தினத்தந்தி 22 Dec 2021 10:15 AM GMT (Updated: 22 Dec 2021 10:15 AM GMT)

நாட்டில் பெரும்பாலானோருக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்று ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

மத்திய அரசின் தடுப்பூசி திட்டம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, நாட்டில் பெரும்பாலானோருக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டில் பெரும்பாலானோருக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு எப்போது தொடங்கப்போகிறது?.

தற்போதைய தடுப்பூசி செலுத்தும் பணிகளின் வேகம் இப்படியே தொடர்ந்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்த மக்கள் தொகையில் 42 சதவிகிதம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்படலாம். கொரோனாவின் 3-வது அலையை தடுக்க வேண்டுமானால் மொத்த மக்கள் தொகையில் 60 சதவிகிதம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். 

அந்த இலக்கை அடைய தினமும் சராசரியாக 6 கோடியே 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும். ஆனால், கடந்த 7 நாட்களில் தினமும் சராசரியாக 58 லட்சத்து பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது இலக்கை விட 5 கோடியே 52 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் குறைவாகும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story