4 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி


Image Courtesy: PTI
x
Image Courtesy: PTI
தினத்தந்தி 30 Dec 2021 9:52 AM GMT (Updated: 30 Dec 2021 9:52 AM GMT)

இரு வெவ்வேறு தடுப்பூசிகளின் 4 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

போபால்,

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து கடந்த 12 நாட்களுக்கு முன்னர் 30 வயது நிரம்பிய பெண் இந்தியா வந்தார். மத்தியபிரதேச மாநிலம் மஹவ் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக அந்த பெண் இந்தியா வந்துள்ளார்.

அந்த பெண் ஏற்கனவே இரு நாடுகளில் இரண்டு வெவ்வேறு கொரோனா தடுப்பூசிகளின் 4 டோஸ்களையும் செலுத்தியுள்ளார். ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான இடைவெளியில் அந்த பெண் சீன தயாரிப்பான சினோபாம் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும், பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், மஹவ் நகரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இந்தூரில் இருந்து விமானம் மூலம் துபாய் செல்ல அந்த பெண் திட்டமிட்டிருந்தார். இதற்காக, பயண நாளான நேற்று அந்த பெண் இந்தூர் விமான நிலையம் வந்தார். விமானத்தில் பயணிப்பதற்கு முன்னர் பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

அந்த பரிசோதனையில் 4 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட அந்த 30 வயது நிரம்பிய பெண்ணுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யபப்ட்டது. இதையடுத்து, அந்த பெண்ணின் விமானப்பயணம் ரத்து செய்யப்பட்டு அவர் இந்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

Next Story