சுரங்கத்தில் குப்பை குவியல் சரிந்து விழுந்து 5 பேர் பலி


சுரங்கத்தில் குப்பை குவியல் சரிந்து விழுந்து 5 பேர் பலி
x
தினத்தந்தி 2 Feb 2022 10:16 AM GMT (Updated: 2 Feb 2022 10:16 AM GMT)

ஜார்க்கண்டில் திறந்தவெளிச் சுரங்கம் ஒன்றில் குப்பை குவியல் சரிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

புவனேஸ்வர்,

ஜார்க்கண்டில் கைவிடப்பட்ட திறந்தவெளிச் சுரங்கம் ஒன்றில் நிலக்கரி எடுக்க முயன்ற உள்ளூர்வாசிகள் மீது குப்பை குவியல் சரிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து சுமார் 400 கிமீ தொலைவில் உள்ள தன்பாத் மாவட்டத்தில் உள்ள கோபிநாத்பூரில் அரசு நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான கைவிடப்பட்ட திறந்தவெளி சுரங்கம் உள்ளது. 

நேற்று அதிகாலை இந்த சுரங்கத்தில் உள்ளூர்வாசிகள் சிலர் நிலக்கரி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த குப்பை குவியல் சரிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சுரங்கத்தில் தற்போது சுரங்கப் பணிகள் நடைபெறவில்லை. மேலும், இறந்தவர்கள் தொழில்முறை சுரங்கத் தொழிலாளர்கள் இல்லை என்றும் அவர்கள் உள்ளூரைச் சேர்ந்த நிலக்கரி எடுப்பவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இந்தியாவில் நிலக்கரிச் சுரங்கம் மிகவும் ஆபத்தான தொழில்களில் ஒன்றாக இருக்கிறது. அரசாங்கத் தரவுகளின்படி, 2020-ம் ஆண்டில் மட்டும் சராசரியாக ஒவ்வொரு 12 நாட்களுக்கும் ஒரு நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளி வேலையின் போது இறந்துள்ளார்.

Next Story