கர்நாடகாவில் அமைதியை சீர்குலைக்கும் பாஜக, காங்கிரஸ் - எச்.டி.குமாரசாமி


கர்நாடகாவில் அமைதியை சீர்குலைக்கும் பாஜக, காங்கிரஸ் -  எச்.டி.குமாரசாமி
x
தினத்தந்தி 21 Feb 2022 10:05 AM GMT (Updated: 21 Feb 2022 10:05 AM GMT)

கர்நாடகாவில் இந்து அமைப்பு பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து அங்கு அமைதியை சீர்குலைக்க காங்கிரசும் பாஜகவும் முயற்சிப்பதாக டி(எஸ்) தலைவர் எச்.டி.குமாரசாமி குற்றம்சாட்டினார்.

பெங்களூரு,

கர்நாடக ஆர்வலர் கொலைக்கு பதிலளித்துள்ள ஜேடி(எஸ்) தலைவர் குமாரசாமி, மாநிலத்தில் இதுபோன்ற சம்பவத்தை காங்கிரசும் பாஜகவும் விரும்புவதாக குற்றம் சாட்டினார். கர்நாடகாவில் அமைதியை சீர்குலைக்க கட்சிகள் முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

சிவமொக்கா நகர் சி.கே.கட்டி பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷா (வயது 24). இவர் பஜ்ரங்தள் என்ற இந்து அமைப்பு பிரமுகர் ஆவார். இந்த நிலையில் நேற்று இரவு தொட்டபேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட பாரதி காலனி ரவிவர்மா வீதி பகுதியில் அவரை 4 பேர் கும்பல் வழிமறித்தது, தாக்கி படுகொலை செய்தனர். பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இந்து அமைப்பு பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதால் சிவமொக்கா நகரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் அந்தப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டுள்ளனர். ஹர்ஷாவை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது தெரியவில்லை.

இதுகுறித்து கருத்து கூறிய ஜேடி(எஸ்) தலைவர் எச்.டி.குமாரசாமி, 

“கடந்த வாரம், ஹிஜாப் பிரச்சினை  தொடங்கியபோது, இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும் என்று நான் கணித்தேன். செயற்பாட்டாளர் (ஹர்ஷா) மரணத்தைப் பார்த்தோம். இது  தான் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் சாதனை அவர்கள் இந்த மாநிலத்தின் அமைதியை சீர்குலைத்து விட்டனர்.  இதுபோன்ற சம்பவத்தை தான்  அவர்கள் விரும்பினர்” என கூறினார்.



முன்னதாக, ஹர்ஷா கொலையில் முஸ்லிம் குண்டர்களுக்கு தொடர்பு இருப்பதாக கர்நாடக மந்திரி  ஈஸ்வரப்பா குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

Next Story