பீகார் மாநில சகோதர சகோதரிகளுக்கு ‘பீகார் தின’ வாழ்த்துக்கள்! - பிரதமர் மோடி


பீகார் மாநில சகோதர சகோதரிகளுக்கு ‘பீகார் தின’ வாழ்த்துக்கள்! - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 22 March 2022 9:56 AM GMT (Updated: 22 March 2022 9:56 AM GMT)

பீகார் தினத்தை முன்னிட்டு, பீகார் மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தனர்.

புதுடெல்லி,

பீகார் மாநிலம் உருவானதைக் குறிக்கும் வகையில் மார்ச் 22 அன்று  “பீகார் தினம்” கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேயர்கள் 1912-ம் ஆண்டு, வங்காளத்தில் இருந்து தனி மாநிலமாக பீகார் மாநிலத்தை பிரித்தனர். பீகார் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, அம்மாநிலத்தில் இன்று ஒரு நாள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் இந்தி மொழியில் வெளியிட்டுள்ள வாழ்த்துப்பதிவில், “பீகார் தினத்தில் மாநில மக்களுக்கு வாழ்த்துக்கள்! பீகார் ஒரு புகழ்பெற்ற வரலாற்றையும்  வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் கொண்டுள்ளது. இங்குள்ள கடின உழைப்பாளிகள் மற்றும் திறமையானவர்கள், நாட்டின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர். 

பீகார் மாநில கவர்னராக நான் பணியாற்றியபோது, இங்குள்ள மக்களிடம் அளவற்ற அன்பை பெற்றுள்ளேன்.இந்த சிறப்பான தருணத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!” என்று தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இந்தியில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “பீகாரின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் பீகார் தின வாழ்த்துக்கள்! கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியம் நிறைந்த இந்த மாநிலம் தொடர்ந்து வளர்ச்சியில் புதிய சாதனைகளை படைக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

Next Story