நைஜீரிய வெளியுறவுத்துறை மந்திரியுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு


நைஜீரிய வெளியுறவுத்துறை மந்திரியுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
x
தினத்தந்தி 24 April 2022 4:22 PM GMT (Updated: 24 April 2022 4:22 PM GMT)

நைஜீரியா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஜெஃப்ரி ஒன்யாமா இன்று காலை டெல்லிக்கு வருகை தந்தார்.

புதுடெல்லி,

இந்தியாவின் முதன்மை மாநாடாக கருதப்படும் ரைசினா சர்வதேச உரையாய்டல் 25 ஆம் தேதி(நாளை) தொடங்கவுள்ளது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். 90 நாடுகளில் இருந்து சுமார் 210 பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் இந்த உரையாடலில், புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரம் பற்றி விவாதிக்கப்பட உள்ளது. 

இதில் கலந்து கொள்வதற்காக நைஜீரியா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஜெஃப்ரி ஒன்யாமா இன்று காலை டெல்லிக்கு வருகை தந்தார். இதனையடுத்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை அவர் சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஜெய்சங்கர்பதிவிட்டுள்ளார். அதில், “நைஜீரியாவின் வெளியுறவுத்துறை மந்திரி ஜெஃப்ரி ஒன்யாமாவை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி. இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையிலான சுகாதாரம், உள்கட்டமைப்பு, கல்வி, விவசாயம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துவது குறித்தும், வர்த்தகம் மற்றும் முதலீடுகள் குறித்தும் பேசப்பட்டது” என்று அவர் தெரிவித்துள்ளார். 

Next Story