ரஷியா கச்சா எண்ணெய் விலையை மேலும் குறைக்குமா..? இந்தியாவின் எதிர்பார்ப்பு


ரஷியா கச்சா எண்ணெய் விலையை மேலும் குறைக்குமா..? இந்தியாவின் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 4 May 2022 10:11 AM GMT (Updated: 4 May 2022 10:11 AM GMT)

ரஷியா ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெய் விலையை ஒரு பீப்பாய்க்கு 70 டாலருக்கும் கீழ் குறைக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது

புதுடெல்லி,

ரஷியா ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெய் விலையை ஒரு பீப்பாய்க்கு 70 டாலருக்கும் கீழ் குறைக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது என்று அந்த துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கச்சா எண்ணெய் குறித்த விஷயத்தை அறிந்த வல்லுனர்களின் கருத்துப்படி, பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு(ஓபிஇசி) தயாரிப்பாளரைக் கையாள்வதில் ஏற்படும் அபாயத்தை ஈடுசெய்ய ரஷியா ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெய் விலை மீது அதிகமான தள்ளுபடியைப் பெற இந்தியா முயற்சிக்கிறது.

உக்ரைன் மீதான ரஷியாவின்  படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்கள் 40 மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய்கள் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கியுள்ளன. இது 2021 ஆம் ஆண்டு முழுவதும் ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு வழங்கப்பட்டதை விட 20% அதிகம் ஆகும்.

உலகளாவிய அளவுகோலான ப்ரெண்ட் படி, தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 105 டாலருக்கு அருகில் வர்த்தகம் செய்யப்படுகிறது.85% க்கும் அதிகமான எண்ணெயை இறக்குமதி செய்யும் இந்தியா, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் எஞ்சிய சில நாடுகளில் ஒன்றாக உள்ளது. இது ரஷியாவுக்கான முக்கிய வருவாய் ஆதாரமாக விளங்குகிறது.

ஐரோப்பிய நாடுகளின் கோரிக்கைகள், ரஷியாவின் எண்ணெய் தொழிலில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் இந்த ஆண்டு உற்பத்தி 17% வரை குறையும் என்று ரஷிய அரசாங்கம் கணித்துள்ளது.

ரஷியாவிலிருந்து இந்தியாவுக்கு எண்ணெய் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படவில்லை. எனினும், அமெரிக்காவிடமிருந்து இந்தியா மீதான அழுத்தம் மற்றும் சர்வதேச கட்டுப்பாடுகளை கடுமையாக்கியதன் காரணமாக வர்த்தகம் மேலும் கடினமாகி உள்ளது.

ரஷியாவுடனான உறவை நிறுத்திக்கொள்ளுமாறு மேற்கத்திய நாடுகளின் நிர்பந்தத்தை இதுவரை இந்தியா நிராகரித்துவிட்டது. ஏனெனில் அதிக விலையில் எண்ணெய் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது மற்றும் இந்தியாவும் ரஷிய ஆயுதங்களை இறக்குமதி செய்வதையே அதிகம் நம்பியுள்ளது.



இந்தியாவின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விலை குறைப்பு கோரிக்கைகளை ஏற்று, இந்தியாவுக்கு எண்ணெய் வழங்கினால், இந்தியாவில் அரசு நடத்தும் சுத்திகரிப்பு ஆலைகள் ஒரு மாதத்திற்கு சுமார் 15 மில்லியன் பீப்பாய்கள் எடுக்கலாம். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் நயாரா எனர்ஜி போன்ற தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பொதுவாக தங்கள் மூலப்பொருட்களை தனித்தனியாக வாங்குகின்றன. 

இந்தியாவின் மொத்த இறக்குமதியில் ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவு மிகவும் குறைவு. இதற்கு முக்கியக் காரணமாக ரஷியா - இந்தியா மத்தியிலான சரக்கு போக்குவரத்துக்கான செலவுகள் மிகவும் அதிகம்.

பால்டிக் கடல் வழியாக மேற்கில் இருந்தும் ரஷியாவின் கிழக்கிலிருந்தும் இந்தியாவிற்கு பொருட்கள் தொடர்ந்து செல்வதற்கான வழிகளை ரஷியா ஆய்வு செய்து வருகிறது. கோடை காலத்தில் இந்த வழிகள் மிகவும் அணுகக்கூடியதாக இருக்கும் என்பதால் ரஷியா அந்த வழித்தடங்களை ஆய்வு செய்து வருகிறது. 

இரு நாடுகளும் கிழக்கில் உள்ள விளாடிவோஸ்டாக் வழியாக கச்சா எண்ணெயை மீண்டும் அனுப்புவது குறித்து ஆய்வு செய்து வருகின்றன. அங்கிருந்து இந்தியாவுக்கான கடல் பயணம் விரைவாக இருக்கும்.ஆனால் அதே வேளையில், அதிக செலவு ஏற்படும் மற்றும் தளவாடத் தடைகள் இதில் அதிகமாக இருக்கும்.

ரஷியா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.அதையடுத்து சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில், சவுதி அரேபியாவுக்கு அடுத்ததாக உலகிலேயே அதிக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் ரஷியா, புதிய அறிவிப்பை வெளியிட்டது.

சர்வதேச விலையைவிட குறைந்த விலையில், அதிக தள்ளுபடியுடன், கச்சா எண்ணெய் விற்க தயாராக இருப்பதாக ரஷியா அறிவித்தது. குறிப்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த சலுகையை தருவதாக கூறியிருந்தது.

நம் நாட்டின் மொத்த பெட்ரோலியப் பொருட்கள் தேவையில், 85 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. தேவையை ஈடு செய்யும் வகையில், ரஷியாவிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.


Next Story