கொரோனாவுக்கு ஊரடங்குதான் தீர்வா? டாக்டர் எழிலன் எம்.எல்.ஏ. பதில்


கொரோனாவுக்கு ஊரடங்குதான் தீர்வா? டாக்டர் எழிலன் எம்.எல்.ஏ. பதில்
x
தினத்தந்தி 8 Jan 2022 9:11 PM GMT (Updated: 8 Jan 2022 9:11 PM GMT)

ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில் டாக்டரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வு.மான எழிலன் கலந்துகொண்டு பேசுகிறார்.

அதில், கொரோனா இரண்டாம் அலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறமையாக கையாண்டதைப் போல் தற்போது 3-வது அலையையும் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு கையாண்டு வருவதாகவும் பாராட்டியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், கொரோனா தொற்று தற்போது தடுப்பூசி செலுத்தியவர்களை பெருமளவு பாதிக்கவில்லை என்றும், தடுப்பூசி போடாதவர்களையும் இணை நோய் உள்ளவர்களுக்கும் தான் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளார். மேலும் கொரோனா பரவலுக்கு ஊரடங்கு ஒன்றுதான் தீர்வா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த ஊரடங்கின் வாயிலாக நோய் பரவல் விகிதம் அதிகரித்து நோயாளிகள் ஒரே நேரத்தில் அதிகரிப்பதை இந்த ஊரடங்கு கட்டுப்படுத்தும் என்றும், இதன் மூலம் டாக்டர்களுக்கு ஒரே நேரத்தில் பல ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவேண்டிய வேலை பளு சற்று குறையும் என்றும் கூறியுள்ளார்.

‘நீட்’ தேர்வை பொறுத்தவரையில் மாநில அரசின் நிதியில் இருந்து கட்டிடங்கள் கட்டப்பட்டு, டாக்டர்கள், செவிலியர்களுக்கு ஊதியம் வழங்கி வரும் நிலையில், அதில் நமது மாணவர்களை சேர்ப்பதற்கு அதிகாரம் இல்லை என்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் விமர்சித்துள்ளார். இதில் கவர்னரும், மத்திய அரசும் தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அம்மா உணவகம், அம்மா மினி கிளினிக் விவகாரம்?, மோடி மீதான பார்வையில் தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ள மாற்றம்? உள்பட சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜசேகரின் கேள்வி களுக்கு அவர் பதிலளித்துள்ளதை கேட்கலாம்.


Next Story