நன்றி உள்ள நாய்க்கு நன்றிக் கடன்; கல்லறை கட்டி பாசத்தை வெளிப்படுத்திய குடும்பம்...!


நன்றி உள்ள நாய்க்கு நன்றிக் கடன்; கல்லறை கட்டி பாசத்தை வெளிப்படுத்திய குடும்பம்...!
x
தினத்தந்தி 24 March 2022 10:30 AM GMT (Updated: 24 March 2022 11:17 AM GMT)

நெல்லை அருகே நன்றி உள்ள நாய்க்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக கல்லறை கட்டி பாசத்தை வெளிப்படுத்திய குடும்பம்.

களக்காடு,

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் நாராயணசுவாமி கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகநயினார். (வயது 56). லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.  இவரது மனைவி பாக்கிய லெட்சுமி. இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

செல்ல பிராணிகள் மீது மிகுந்த அன்பு கொண்ட இந்த தம்பதிகள் தங்கள் வீட்டில் லவ் பேர்ட்ஸ் புறா போன்ற பறவைகளை வளர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில்  கேரளாவில் இருந்து வந்த பொமோரியன் வகை நாயையும் கடந்த 2009-ம்  ஆண்டு முதல் வளர்த்து வந்தது.

இந்த நாயுக்கு பொம்மி என்று பெயர் சூட்டி கடந்த 13 ஆண்டுகளாக  வளர்த்து வருந்தனர். பொம்மி கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3 குட்டிகள் ஈன்றது. இதில் 2 குட்டிளை உறவினரிடம் கொடுத்துவிட்டு ஒரு குட்டியை பொம்மியுடன் சேர்த்து குழந்தை போல் பாசத்தை ஊட்டி வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் பொம்மிக்கு  கடந்த சில நாட்களாக வயது முதிர்வின் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அதற்கு கூடுதல் கவனம் செலுத்தி அதற்கு தேவையான உணவு மற்றும் சத்தான பொருட்கள் கொடுத்து கவனித்து வந்தனர். கால்நடை மருத்துவர் மூலம் தீவிர சிகிச்சையும் அளித்து உள்ளனர். 

இந்த நிலையில் பொம்மி நாய் இன்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தது. குடும்பத்தில் ஒருவர் போல் பாசம் காட்டி வளர்த்து வந்த நாய் உயிரிழந்தால் ஆறுமுகநயினார் குடும்பத்தினர் மிகுந்த மனவேதனை அடைந்தனர்.

குடும்பத்தில் ஒருவனாக செல்லமாக வளர்த்ததால் நாய்க்கு சிதம்பரபுரம் ஊருக்கு மேற்கே சந்திரங்காட்டில் உள்ள தங்களது நிலத்தில் மனிதர்களை அடக்கம் செய்வது போல் மரியாதையுடன் நாயை அடக்கம் செய்துள்ளனர். தற்போது அந்த இடத்தில் கல்லறையும் கட்டி உள்ளனர்.

Next Story