தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஓய்வூதியர் கூட்டமைப்பினர் தர்ணா போராட்டம்


தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஓய்வூதியர் கூட்டமைப்பினர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 17 May 2022 10:07 AM GMT (Updated: 17 May 2022 10:07 AM GMT)

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஓய்வூதியர் கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தினர்.

தர்மபுரி,

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று  தர்ணா போராட்டம் நடைபெற்றது. 

போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் கார்த்திகேயன், நிர்வாகி பெருமாள், மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் விஜயன், மாவட்ட நிர்வாகிகள் பாஸ்கரன், கோபாலன், அப்பாவு,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

குறைந்தபட்ச ஓய்வூதியம்

மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்து செலவை திரும்பபெற அளிக்கப்பட்ட மனுக்களில் பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், வனத்துறை காவலர்கள் மற்றும் ஊராட்சி எழுத்தாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7, 850 வழங்க வேண்டும். சட்டமன்ற தேர்தலின் போது ஓய்வூதியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அளிக்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

தமிழக அரசு கூடுதல் ஓய்வூதியம் பெறுவதற்காக ஓய்வூதியர்களின் வயதை 80- ல் இருந்து 70- ஆக குறைக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கடந்த ஜனவரி மாதம் முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஓய்வூதியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story