உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? - மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி


உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? - மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி
x

உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை,

விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த இரண்டு பட்டாசு விபத்து சம்பவங்கள் தொடர்பாக முன்ஜாமீன் மற்றும் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மதுரை ஐகோர்ட்டு கிளையில் இன்று விசாரணைக்கு வந்தன. ஆமத்தூர், தாயில்பட்டி ஆகிய இரண்டு கிராமங்களில் வி.ஏ.ஓ.க்கள் மற்றும் போலீசாருக்கு தெரியாமல் உரிமம் பெறாத பட்டாசு ஆலைகள் இயங்கி வந்தது அதிர்ச்சி அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

சட்டவிரோத பட்டாசு ஆலைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், வெடிமருந்துகள் ஆகியவை தவறான வழிகளிலும் பயன்படுத்தப்படலாம் என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என்றும், மேற்கண்ட இரண்டு கிராமங்களின் வி.ஏ.ஓ.க்கள் கிராமங்களில்தான் வசிக்கிறார்களா? என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் விசாரணை அதிகாரிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் வழக்கின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மனுதாரர்களுக்கு ஜூன் 7-ந்தேதி வரை இடைக்கால ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Next Story