தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: உணவு இடைவேளை வரை இந்தியா 53/3


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: உணவு இடைவேளை வரை இந்தியா 53/3
x
தினத்தந்தி 3 Jan 2022 10:13 AM GMT (Updated: 3 Jan 2022 10:13 AM GMT)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளை வரை இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது.

ஜோகனர்ஸ்பெர்க்,

தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகனர்ஸ்பெர்க்கில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்கான டாஸ் தற்போது சுண்டப்பட்டது. 

இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. முதுகுவலி காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார்.

இந்த போட்டியில், உணவு இடைவேளை வரை இந்திய அணி  3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். புஜாரா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். ரகானே டக்-அவுட்(0) ஆனார்.

தற்போது கே எல் ராகுல் 19 ரன்களுடனும், ஹனுமா விஹாரி 4 ரன்களுடனும் களத்தில்  உள்ளனர்.

தென்னாப்பிரிக்கா அணியில் டுவானே ஒலிவியர் 2 விக்கேட்டுகளையும்,  மேர்கோ ஜேன்சண் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Next Story