நான் இருக்கும் வரை நீங்கள் அணியில் இருப்பீர்கள் என கங்குலி கூறினார்: விருத்திமான் சாகா


நான் இருக்கும் வரை நீங்கள் அணியில் இருப்பீர்கள் என கங்குலி கூறினார்: விருத்திமான் சாகா
x
தினத்தந்தி 20 Feb 2022 9:17 AM GMT (Updated: 20 Feb 2022 9:17 AM GMT)

இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பரான விருத்திமான் சகா, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாகா. இவர் இந்திய டெஸ்ட் அணியில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்த நிலையில் நேற்று அறிவிக்கப்பட்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் பெயர் இல்லை. அணியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது,

கடந்த நவம்பர் மாதம் கான்பூரில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் நான் வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொண்டு ஆட்டம் இழக்காமல் 61 ரன் எடுத்தேன். அப்போது கங்குலி வாட்ஸ்அப் மூலம் என்னை பாராட்டினார்.

கிரிக்கெட் வாரிய தலைவராக இருக்கும் வரை எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று கங்குலி என்னிடம் வாக்குறுதி அளித்தார். அவரது தைரியம் என் நம்பிக்கையை அதிகரித்தது. ஆனால் தற்போது அவசரமாக நான் நீக்கப்பட்டது ஏன் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

இந்திய அணிக்கு மீண்டும் நான் தேர்வு செய்யப்பட மாட்டேன் என்பதால் ஓய்வு பெறுமாறு அணி நிர்வாகம் பரிசீலிக்க சொன்னது. அணி ஒரு புதிய விக்கெட் கீப்பரை தேர்வு செய்ய விரும்புகிறது. இவ்வாறு சாகா கூறினார்.


Next Story