என்னை நம்பிய ஹர்திக் பாண்டியா மற்றும் அணி நிர்வாகத்திற்கு நன்றி - ஜேசன் ராய்


என்னை நம்பிய ஹர்திக் பாண்டியா மற்றும் அணி நிர்வாகத்திற்கு நன்றி - ஜேசன் ராய்
x
தினத்தந்தி 1 March 2022 10:00 AM GMT (Updated: 1 March 2022 10:02 AM GMT)

இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் ஜபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்து இருந்தார்.

லண்டன்,

10 அணிகள் கொண்ட  15-வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் மும்பையில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் அகமதாபாத், லக்னோ ஆகிய இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த தொடரில் புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ், ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் ஜேசன் ராயை ரூ. 2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.ஐபிஎல் தொடங்க சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் ஜபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் அவர் தனது முடிவு குறித்து டுவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

அனைவருக்கும் வணக்கம். மிக கனத்த இதயத்துடன் இந்த ஆண்டு .ஐபிஎல்  தொடரில் இருந்து விலகுவதாக முடிவு எடுத்துள்ளேன். என்னை நம்பியதற்கு அணி நிர்வாகத்திற்கும் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா-விற்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். 

கடந்த 3 வருடமாக  நமது உலகத்தில் நடந்த விஷயங்கள் எனக்கு இந்த முடிவை எடுக்க சுமையாக அமைந்தது. நான் எனது குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புகிறேன்.இந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாட இருக்கும் ஒவ்வொரு போட்டியையும் பார்க்க ஆவலாக உள்ளேன்.

இந்த முறை குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வெல்ல விரும்புகிறேன்.எனது முடிவை அனைவரும் மதிப்பீர்கள் என நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story