பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்; ரஷிய அணி தங்கம் வென்றது


பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்; ரஷிய அணி தங்கம் வென்றது
x
தினத்தந்தி 13 Feb 2022 10:29 AM GMT (Updated: 13 Feb 2022 10:29 AM GMT)

4*10 கி.மீ தூர ரிலே விளையாட்டில் ரஷிய ஒலிம்பிக் கமிட்டி அணி தங்கம் வென்றது

பீஜிங்,

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகின்றன. அதில் இன்று நடைபெற்ற 4*10 கி.மீ தூர ரிலே விளையாட்டில் ரஷிய ஒலிம்பிக் கமிட்டி அணி 1 நிமிடம் 7.2 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தது. அதற்கு அடுத்த இடத்தை நார்வே அணி பிடித்தது. அதனை தொடர்ந்து பிரான்ஸ் அணி மூன்றாம் இடம்பிடித்தது.

போட்டி நடைபெறும் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக போட்டியை பார்வையாளர்கள் கண்டுகளிக்க மிகவும் சிரமப்பட்டனர். இதனால் மைதானத்தின் அனைத்து விளக்குகளும் ஏற்றப்பட்டு போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில், ஆரம்பம் முதலே ரஷிய அணி வீரர்கள் முன்னணியில் இருந்தனர். முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், ரிலே விளையாட்டில் ரஷிய அணி வெள்ளிப்பதக்கம் வென்றிருந்த நிலையில் இம்முறை தங்கம் வென்று அசத்தியது.

Next Story