பயிர் உற்பத்தி திட்டம்


பயிர் உற்பத்தி திட்டம்
x

நெல்லை மாவட்டத்தில் 40 ஏக்கரில் கால்நடை தீவனபயிர் உற்பத்தி திட்டம்- கலெக்டர் தகவல்

திருநெல்வேலி

தமிழ்நாடு அரசு கால்நடைகளுக்கான தீவன பற்றாக்குறையை போக்கும் நோக்கத்துடன் தீவன மேம்பாட்டு நிறுவனம் 2022-2023 ஆண்டில் ஊடுபயிர் மூலம் தீவன பயிர் உற்பத்தியை பெருக்கும் திட்டம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் செலவில் 40 ஏக்கரில் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடிய கால்நடை வளர்ப்போர் நீர்ப்பாசன வசதியுடன் ½ ஏக்கர் முதல் ஒரு எக்டேர் வரை தோப்பு மற்றும் பழத்தோட்டம் வைத்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பயனாளிகள் 3 ஆண்டுகள் வரை பராமரிக்க விருப்பம் உடையவராக இருக்க வேண்டும். கால்நடை வைத்திருக்கும் பயனாளிகள் நீர் மேலாண்மை முறைகளை பயன்படுத்துபவராக இருக்க வேண்டும். தேர்வு பெறும் பயனாளிகள் அதிக கால தீவன பயிர் வளர்ப்பவராக இருக்க வேண்டும். சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் வகுப்பினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். தீவன விதை விதைப்பு சான்று கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று வழங்க வேண்டும். இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவர்களை அணுகி விவரங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த தகவலை, கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.


Next Story