மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
அரியலூர் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. வருவாய் குறுவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 11, 14, 17, 19, வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகள் இந்த போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். நேற்று மாணவர்களுக்கான கபடி, கைப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்திருந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு விளையாட உள்ளனர். போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேகளீசன் தலைமையில், உடற்கல்வி ஆசிரியர்கள் ரவி, ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர். இன்று (வியாழக்கிழமை) மாணவிகளுக்கான கபடி, கைப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகிறது.