மாங்கரை ஊராட்சியில்பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு உறுதிமொழி ஏற்பு

மாங்கரை ஊராட்சியில்பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு உறுதிமொழி ஏற்பு
Published on

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே மாங்கரை ஊராட்சியில் உள்ள கிராமங்களில் கஞ்சா, சாலை விபத்து மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் மாங்கரையில் நடைபெற்றது. பென்னாகரம் போலீஸ் துணை சூப்பிரண்டு இமயவரம்பன் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வன் வரவேற்றார். பா.ம.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா செந்தில் மற்றும் 7 ஊர் கவுண்டர்கள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் கலந்து கொண்டு இளம் சமூகத்தினர் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வாகன ஓட்டிகள் ஹெல்மட் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும். இளைஞர்கள் போட்டி தேர்வு எழுதி உயர் பதவிகளை அடைய வேண்டும். கிராமங்களில் சந்துக்கடைகளில் மது மற்றும் போதை பொருட்கள் விற்பது தெரியவந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பேசினார்.

இதையடுத்து மாங்கரை ஊராட்சியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்துவது தொடர்பான வழக்குபதிவு செய்யப்படவில்லை. அதனை பாராட்டு வகையில் மாங்கரை ஊராட்சியை கஞ்சா இல்லா ஊராட்சியாக அறிவிக்கப்பட்டது. மலும் விபத்து, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் மாங்கரை ஊராட்சியில் 7 ஊரை சேர்ந்த கவுண்டர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கபட்டனர். இதில் ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com