துர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு


துர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

துர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

தஞ்சாவூர்

திருச்சிற்றம்பலம் அருகே உள்ள பாலத்தளி கிராமத்தில் துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதையொட்டி பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதியில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நேற்று காலை முதல் இரவு வரை கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு சென்றனர். சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை பாலத்தளி துர்க்கை அம்மன் கோவில் நிர்வாகிகளும், ஊழியர்களும் செய்திருந்தனர்.


Next Story