மூதாட்டியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை

பாகூரில் மூதாட்டியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
மூதாட்டியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
Published on

புதுச்சேரி

பாகூரில் மூதாட்டியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மூதாட்டி பலாத்காரம்

புதுவை எல்லைப் பகுதியான பாகூர் பகுதியை சேர்ந்த 63 வயது மூதாட்டி ஒருவர் கடந்த ஆண்டு ஜனவரி 30-ந்தேதி தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த கடலூர் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த உலகநாதன் மகன் சிலம்பரசன் (வயது 25) மூதாட்டியிடம் செல்போன் கேட்டுள்ளார்.

பின்னர் மூதாட்டியிடம் பேசிக்கொண்டிருந்த சிலம்பரசன் திடீரென கையில் வைத்திருந்த தடியால் அவரை தாக்கினார். இதில் மயங்கி விழுந்த மூதாட்டியை ஈவு இரக்கமின்றி அருகில் உள்ள புதருக்குள் இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டிய அவர், மூதாட்டி காதில் கிடந்த தங்க கம்மலையும் பறித்து கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இது தொடர்பான வழக்கு புதுச்சேரி 2-வது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நீதிபதி இளவரசன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. சிலம்பரசன் மீதான குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

மேலும் தங்க நகையை பறித்ததற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் விநாயகம் ஆஜராகி வாதாடினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com