தூத்துக்குடி மாவட்டத்தில் 2025-ல் இதுவரை 134 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 3 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 பேரை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2025-ல் இதுவரை 134 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

தூத்துக்குடி மாவட்டம் கலியாவூர் வடக்கு தெருவை சேர்ந்த தங்கராஜ் மகன் முத்து கல்யாணி (வயது 24) என்பவர், கடந்த 1.11.2025 அன்று முறப்பநாடு காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஆவார். தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் கண்ணபெருமாள்(26) என்பவர், கடந்த 27.10.2025 அன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஆவார்.

தூத்துக்குடி ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் முருகன்(எ) ஸ்டீபன்(43) என்பவர், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஆவார். மேற்சொன்ன 3 பேரையும், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின் பேரில் நேற்று (1.12.2025) சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 134 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com