பனிமூட்டம் காரணமாக ரத்தாகும் விமானங்கள்; கட்டணம் திருப்பி செலுத்தப்படும் - ஏர் இந்தியா அறிவிப்பு

பிப்ரவரி 10-ந்தேதி வரை இந்த நடைமுறை செயல்பாட்டில் இருக்கும் என ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-12-12 14:26 IST

சென்னை,

பனிமூட்டம் காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டால் பயணிகளுக்கு அவர்களின் டிக்கெட் கட்டணம் திருப்பி செலுத்தப்படும் என ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. அதே சமயம், பயணிகள் மாற்று விமானங்களில் பயணிக்க விரும்பினால், விமான டிக்கெட்டுகள் மாற்றி கொடுக்கப்படும் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்த நடைமுறை 2026 பிப்ரவரி 10-ந்தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பனிமூட்டம் காரணமாக ரத்தாகும் விமானங்கள் குறித்து பயணிகளுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்க கட்டுப்பாட்டு மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்