சென்னை விமான நிலையத்தில் ரூ.11.5 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் - 5 பேர் கைது

விமான நிறுவன கேபின் ஊழியர் உள்பட மொத்தம் 5 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.;

Update:2025-12-11 21:37 IST

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் சென்றது. அதில் பெரும் அளவு தங்கம் கடத்தி செல்லப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது துபாயில் இருந்து சென்னை சென்ற எமிரேட்ஸ் விமானத்தின் கேபின் ஊழியரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடலை சோதனை செய்த போது இடுப்பு, மார்பு பகுதியில் 3 வெல்க்ரோ பட்டைகள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது, வெள்ளை காகிதத்தில் 10 தங்க பேஸ்ட்களை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து சுமார் ரூ.11 கோடியே 50 லட்சம் மதிப்புடைய 9 கிலோ 460 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள், விமான நிறுவன கேபின் ஊழியரை கைது செய்தனர். மேலும் அவர் அளித்த தகவலின்பேரில் அந்த தங்கத்தை கடத்தி சென்ற பயணி, கடத்தல் தங்கத்தை வாங்க விமான நிலையம் அருகே உள்ள ஓட்டலில் தங்கி இருந்த 3 பேர் என 5 பேரை கைது செய்தனர். பின்னர் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்