இன்றைய ராசிபலன் (28.01.2026): காதலர்களின் திருமண கனவு பலிக்கும்

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய ராசிபலன் (28.01.2026): காதலர்களின் திருமண கனவு பலிக்கும்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

கிழமை: புதன் கிழமை

தமிழ் வருடம்: விசுவாவசு

தமிழ் மாதம்: தை

நாள்: 14

ஆங்கில தேதி: 28

மாதம்: ஜனவரி

வருடம்: 2026

நட்சத்திரம்: இன்று காலை 7-42 வரை கிருத்திகை பின்பு ரோகிணி

திதி: இன்று பிற்பகல் 02-36 வரை தசமி பின்பு ஏகாதசி

யோகம்: அமிர்த, சித்த யோகம்

நல்ல நேரம்: காலை 9-30 to 10-30

நல்ல நேரம்: மாலை 4-30 to 5-30

ராகு காலம்: மாலை 12-00 to 1-30

எமகண்டம்: காலை 7-30 to 9-00

குளிகை: காலை 10-30 to 12-00

கௌரி நல்ல நேரம்: காலை 10-30 to 11-30

கௌரி நல்ல நேரம்: மாலை 6-30 to 7-30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டமம் : சுவாதி

இன்றைய ராசிபலன்

மேஷம்

உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் கருத்துக்களை அலுவலகத்தில் ஏற்று நடப்பர். வியாபாரிகளுக்கு பெரிய முதலீடுகள் செய்வதில் அவசரம் வேண்டாம். விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர். திருமண விசயத்தில் நன்கு பொருத்தம் பார்த்து செய்வதில் அதிக கவனம் தேவை. உடல் நலம் சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

ரிசபம்

இந்த நாளில் சுறுசுறுப்பு கூடும். அலுவலகத்தில் தங்கள் செயலுக்கு பாராட்டுகள்த குவியும். தாங்கள் நினைத்தவாறே வீடு கட்ட எதிர்பார்த்த கடனுதவி வங்கியில் கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குடும்பத்தில் குதூகலம் தங்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மிதுனம்

மனம் அலைபாயும். தியானம் மேற்கொள்வது நல்லது. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவர். உடல்நிலை நன்றாக இருக்கும். மார்கெட்டிங்பிரிவினர் அதிக ஆர்டர்கள் பெறுவர்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கடகம்

பேச்சில் கடினத்தன்மையை குறைத்து மென்மையாக பழகவும். வாக்குறுதிகளை நிறைவேற்றும் நாளாக அமையும். எதிர்பாராத செலவுகள் வந்துபோகும். குறித்த நேரத்தில் உணவு உட்கொள்ளுங்கள். பெண்கள் சுயதொழிலில் முன்னேற்றம் காண்பர். விருந்து விழா என்று கலந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

சிம்மம்

வியாபாரிகளுக்கு புதிய தொடர்புகள் முன்னேற்றத்தை அளிக்கும். நீண்டநாட்களாக தடைப்பட்ட காரியம் இனிதே நிறைவேறும். மாணவர்கள் கதை புத்தகங்களில் ஆர்வத்தை காண்பிப்பர். மாறாக, படிப்பில் கவனத்தை செலுத்தவும். பணவரவு திருப்தி தரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கன்னி

நினைத்த காரியம் வெற்றி பெறும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். நண்பர்களிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது. வியாபாரிகள் தங்கள் தொழில்நுட்ப புத்தியை நன்கு கையாள்வர். லாபமும் இரட்டிப்பாகும். உத்யோகஸ்தர்களின் மதிப்பு கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

துலாம்

இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் நன்மை பெரிதாக இருக்காது. இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

விருச்சிகம்

இன்று நடத்தப்படும பேச்சுவார்த்தைகள் தங்களுக்கு சாதகமாக இருக்கும். வழக்கில் திருப்பம் ஏற்படும். கடனில் ஒரு பகுதியை அடைத்துவிடுவீர்கள். தம்பதிகளிடையே அன்பு பலமாகும். காதலர்களது திருமண கனவு பலிக்கும். மாணவர்கள் திட்டமிட்டுப்படித்தால் அதிக மதிப்பெண்களை ஈட்டலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்

தனுசு

செலவுகள் கூடும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தவும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு. குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். தொழிலில் போட்டிகள் குறையும். பணவரவு தாமதப்படும். பெண்கள் எண்ணம் கைகூடும். கை, கால் வலி வந்துப் போகும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மகரம்

எதிர்பாராத உதவிகள் வெளிநபரிடம் கிடைக்கும். நண்பர்களிடம் வாக்குவாதங்கள் வேண்டாம். அமைதிகாப்பது நல்லது. மார்கெட்டிங்பிரிவினர்களுக்கு அதிக கமிஷன் கிடைக்கும் நாளாக அமையும். சுப காரியம் கைகூடும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

கும்பம்

அரசியலில் இருப்போருக்கு புதுப் பொறுப்புகள் கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு தாயார் தங்களுக்கு உதவிகரமாக இருப்பார். அழகு நிலையத்தில் லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் உள்ளவர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வர். உறவினர்கள் வந்து போவர். உடல் நலம் சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை

மீனம்

கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள்.

குடும்பத் தலைவிகள் வீட்டிலிருந்தபடியே தாங்கள் தொழிலை துவங்குவர். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். தந்தைவழி சொத்து கைக்கு வரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com