

ஆந்திரா, கேரளா ஆகிய 2 மாநிலங்களிலும் மிகப்பெரிய வசூல் சாதனை செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் இதுவரை ரூ.200 கோடியை தாண்டி வசூல் செய்து இருக்கிறது என்று ஒரு விநியேகஸ்தர் தரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
அடுத்தடுத்த வாரங்களில், எந்த ஒரு பெரிய படமும் வராததால், தீபாவளிக்கு வந்த `பிகில்,' `கைதி' ஆகிய 2 படங்களும் வசூல் சாதனையுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.
சென்னையில் மட்டும் `பிகில்' படம் ரூ.15 கோடியை தாண்டி வசூல் செய்து இருக்கிறது. விஜய் படங்கள் சென்னையில் அதிக வசூல் செய்யும் என்பதற்கு உதாரணமாக, `பிகில்' படம் வசூல் மூலம் மீண்டும் நிரூபித்து இருக்கிறது என்றார்.