ஓ.டி.டி.யில் வெளியாகும் விமல் நடித்துள்ள 'சார்' படம்

போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடித்துள்ள சார் படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
ஓ.டி.டி.யில் வெளியாகும் விமல் நடித்துள்ள 'சார்' படம்
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விமல். 'கன்னி மாடம்' என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான போஸ் வெங்கட் இயக்கத்தில் 'சார்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த அக்டோபர் மாதம் வெளியானது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் விமல் உடன் இணைந்து சரவணன், விஜய் முருகன், ஆடுகளம் ஜெயபாலன், நடிகை ரமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சாயா கண்ணன் என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் நிறுவனம் வெளியிட்டது. 

இப்படம் கல்வியின் முக்கியத்துவத்தையும், கல்வி அனைவருக்கும் சமம்மான ஒன்று என அழுத்தி கூறியிருக்கிறது. இத்திரைப்படத்தை திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் பார்த்து பாராட்டியிருந்தனர்.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, வருகிற 6-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com