அக்னி சிறகுகள்

ரஷியாவில் 20 டிகிரி குளிரில் துணிச்சலாக நடித்த நடிகர் அக்னி சிறகுகள் படத்தின் சினிமா முன்னோட்டம்.
அக்னி சிறகுகள்
Published on

கடந்த 2013-ம் ஆண்டில் திரைக்கு வந்த மூடர் கூடம் படத்தில் டைரக்டராக அறிமுகமானவர், நவீன். இவர் தற்போது, அக்னி சிறகுகள் என்ற படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய், விஜய் ஆண்டனி ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.

சமீபத்தில் விஜய் ஆண்டனி தனது சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்தது பற்றி டைரக்டர் நவீன் கூறும்போது..

விஜய் ஆண்டனி மற்றவர்கள் நலனில் அக்கறை கொண்டவர். தியாக மனப்பான்மை கொண்ட நடிகர். ஒரு மாட்டுக் கொட்டகையில் உட்கார்ந்து மேக்கப் போட சொன்னால் கூட, அதை ஏற்றுக்கொள்வார். தனது காரில் குளிர்சாதன கருவியை பயன்படுத்த மாட்டார். அப்படிப்பட்டவர், ரஷியாவில் 20 டிகிரி குளிரில் ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார் என்றார்.

வேகமாக வளர்ந்து வரும் அக்னி சிறகுகள் படத்தில் அக்ஷரா ஹாசன், ரைமாசென் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். டி.சிவா தயாரிக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com