முதன்முதலாக போலீஸ் அதிகாரியாக உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் படத்துக்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் தனது நடிப்பை வழங்கி வருகிறார்.
முதன்முதலாக போலீஸ் அதிகாரியாக உதயநிதி
Published on

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நகைச்சுவை நாயகனாக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் படத்துக்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் தனது நடிப்பை வழங்கி வருகிறார். அந்த வகையில் அவர் முதன்முதலாக ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

இது, ஆர்ட்டிகிள் 15 என்ற இந்தி படத்தை தழுவிய கதை. படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. உதயநிதி ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். படத்தில் இவருக்கு ஊடக நிருபர் வேடம்.

கனா படத்தின் மூலம் கவனம் ஈர்த்த டைரக்டர் அருண்ராஜ் காமராஜ், இந்த படத்தை டைரக்டு செய்கிறார். ராகுல் தயாரிக்கிறார். படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கி, தொடர்ந்து நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com