கனா

சிவகார்த்திகேயன் தயாரிப்பில், `கனா' தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகி விட்ட சிவகார்த்திகேயன், சினிமா முன்னோட்டம்.
கனா
Published on

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில், சொந்த பட நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். இந்த பட நிறுவனம் சார்பில் அவர், கனா என்ற படத்தை தயாரிக்கிறார். அருண்ராஜா காமராஜ் டைரக்டு செய் கிறார். படத்தை பற்றி அவர் கூறுகிறார்:-

இது, மகளிர் கிரிக்கெட் அணியை பற்றிய கதை. அதன் பின்னணியில், வெற்றியை நோக்கி பயணிக்கும் ஒரு பெண்ணின் கனவுகள் மற்றும் போராட்டங்களை சித்தரிக்கும் படம், இது. ஒரு பெண் தனது கனவுகளை நிறைவேற்றுவதில், ஒரு தந்தை முதுகெலும்பாக இருப்பதன் முக்கியத்துவத்தையும் படம் பேசும்.

இது, பெண்களின் கனவுகளையும், சாதனைகளையும் சொல்வதை தாண்டி, அவர்களின் கனவுகளை நனவாக்க துணை நிற்பவர்களை பற்றியும் மிக யதார்த்தமாக பேசும். தந்தை-மகள் இடையே உள்ள பாசம், உணர்ச்சிகரமாக முழு திரைப்படத்தையும் அலங் கரிக்கும்.

ஐஸ்வர்யா ராஜேசின் தந்தை கதாபாத்திரத்தில், சத்யராஜ் வாழ்ந்திருக்கிறார். இருவரும் சம்பந்தப்பட்ட காட்சிகளை நிஜவாழ்க்கையில் தந்தைகளும், மகள்களும் தங்களோடு தொடர்புப்படுத்தி பார்ப்பார்கள்.

படத்தை அடுத்த மாதம் (டிசம்பர்) திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்.

சத்யராஜ்-ஐஸ்வர்யா ராஜேசுடன் கிரிக்கெட் பயிற்சியாளராக சிவகார்த்திகேயன்

சத்யராஜ்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள `கனா' படத்தில், ஒரு முக்கிய வேடத்தில் சிவகார்த்திகேயனும் நடிக்கிறார். இதுபற்றி அந்த படத்தின் டைரக்டர் அருண்ராஜா காமராஜ் கூறியதாவது:-

``கனா படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி படத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றிருக்கிறது. அதற்கு படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருப்பதும், ஒரு காரணம். படத்தில் அவர் கிரிக்கெட் பயிற்சியாளராக நடித்து இருக்கிறார்.

இது, பெண்களை மையப்படுத்திய படம் என்று மட்டுமே சொல்ல முடியாது. இது, அனைவருக்குமான படம். கனவு மற்றும் ஆசைகள் அனைவருக்கும் பொதுவானது அல்லவா? அதுபோலவே இந்த படம் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் படம்.

இதில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன் சிவகார்த்திகேயன், தர்ஷன், இளவரசு, முனீஷ்காந்த் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களும் படத்தில் நடித்துள்ளனர்.''

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com