

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா ஆகிய படங்களை தயாரித்தவர், எஸ்.கதிரேசன். இவர் தற்போது 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் ஒரு புதிய படத்தை தயாரித்து இயக்குகிறார். அந்தப் படத்தின் பெயர், ருத்ரன். ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.
கே.பி.திருமாறன் கதை- திரைக்கதையில் உருவாகும் இந்தப் படத்தில், லாரன்ஸ் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். நாசர், பூர்ணிமா பாக்யராஜ் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.