சீமராஜா

‘அருவி’ டைரக்டரின் அடுத்த படம் இயற்கையும், இசையும் கலந்த பயணம்
சீமராஜா
Published on

சமீபத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் மறக்க முடியாத அளவுக்கு நெஞ்சில் தடம் பதித்த படம், அருவி. கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த அருண் பிரபு டைரக்டு செய்த படம், இது. கதையும், அதை சொன்ன விதமும் வித்தியாசமான கோணத்தில் இருந்ததால், படம் பல விருதுகளை வாங்கி குவித்தது.

அருண் பிரபு இயக்கும் அடுத்த படம் எது? என்ற எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் இருந்தது. சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, சீமராஜா ஆகிய படங்களின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதிய படத்தை இயக்க அருண் பிரபு சம்மதித்து இருக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்பட வில்லை. படத்தை பற்றி தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா கூறியதாவது:-

இயற்கையும், இசையும் கலந்த அழுத்தமான பயண கதை, இது. கதாநாயகன்-கதாநாயகி முடிவாகவில்லை. பின்னணி பாடகர் பிரதீப்குமார் இசையமைக்கிறார். ஷெல்லி, ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு வருகிற ஜூலை மாதம் இறுதியில் தொடங்குகிறது.

24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரித்து வந்த சீமராஜா படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. இதில் சிவகார்த்திகேயன்-சமந்தா ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். ஒரு முக்கியமான கவுரவ கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருக்கிறார். இவர்களுடன் நெப்போலியன், லால், சிம்ரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்களை தயாரித்த பொன்ராம் டைரக்டு செய்து இருக்கிறார். டி.இமான் இசையமைத்துள்ளார். செப்டம்பர் 13-ந் தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று, சீமராஜா திரைக்கு வரும்.

அடுத்த தயாரிப்பாக, அருவி புகழ் அருண் பிரபு டைரக்டு செய்யும் புதிய படத்தை உருவாக்க இருக்கிறோம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com