வங்காள விரிகுடா

‘வங்காள விரிகுடா’ என்ற பெயரில், ஒரு புதிய படம் தயாராகி உள்ளது. படத்தின் முன்னோட்டம்.
வங்காள விரிகுடா
Published on

மேலும் ஒரு பேய் கதை வங்காள விரிகுடா - இந்த படத்தில் குகன் சக்கரவர்த்தியார் கதாநாயகனாக நடித்து இயக்கி உள்ளார். இவர், கின்னஸ் சாதனைக்காக இசை, ஒளிப்பதிவு, பாடல், நடனம், ஸ்டண்ட் உள்பட 21 திரைப்பட பொறுப்புகளை ஏற்றுள்ளார்.

கதாநாயகிகளாக ஜெயஸ்ரீ, பிரபாத், அலினா ஷேக் ஆகியோர் நடித்துள்ளனர். பொன்னம்பலம், வாசு விக்ரம், வையாபுரி உள்ளிட்ட மேலும் பலரும் நடித்துள்ளனர். படத்தை பற்றி குகன் சக்கரவர்த்தியார் கூறியதாவது:-

நான்கு வருட வாழ்க்கையை ஒரே நாளில் யோசிப்பதுபோல் இந்த படத்தின் கதை அமைந்துள்ளது. கிராமத்தில் நேர்மையாக வாழும் இளைஞன், ஒரு பெண் மீது காதல்வசப்படுகிறான். அந்த பெண்ணோ அவன் ஏழை என்பதற்காக உதாசினப்படுத்தி விடுகிறாள். இதனால் அந்த இளைஞன் இரவு-பகலாக உழைத்து பணக்காரன் ஆகிறான். அப்போது அவனது வாழ்க்கையில் ஒரு பெண்ணின் ஆவி குறுக்கிடுகிறது. அதனால் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பது கதை.

தூத்துக்குடியை பின்புலமாக வைத்து தயாராகி உள்ளது. பெரும்பகுதி படப் பிடிப்பு கடலோர பகுதிகளில் நடந்துள்ளது. சென்னையில் வங்காள விரிகுடா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் நினைவிடங்களில் உரிய அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம்.

படத்துக்கு தணிக்கை குழு, யூ ஏ சான்றிதழ் அளித்துள்ளது. விலங்குகள் நல வாரியத்தில் அனுமதி பெற்று குதிரை மற்றும் யானைகளை படத்தில் பயன்படுத்தி இருக்கிறோம். 21 பொறுப்புகளை நானே ஏற்றுள்ளதால் படத்தை கின்னஸ் சாதனைக்காக அனுப்ப உள்ளோம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com