நடிகைகளுக்கு அழகு முக்கியம் - நிதி அகர்வால்

“ஆரோக்கியமான உணவுதான் அழகின் ரகசியம். முன்னோர்கள் ஆரோக்கிய உணவைத்தான் சாப்பிட்டனர்.
நடிகைகளுக்கு அழகு முக்கியம் - நிதி அகர்வால்
Published on

தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக பூமி படத்தில் அறிமுகமானவர் நிதி அகர்வால். சிம்புவின் ஈஸ்வரன் படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். அழகு, ஆரோக்கியம் பற்றி அவர் கூறியதாவது:-

ஆரோக்கியமான உணவுதான் அழகின் ரகசியம். முன்னோர்கள் ஆரோக்கிய உணவைத்தான் சாப்பிட்டனர். அதனால்தான் எண்பது வயதிலும் பல் போகாமலும், பாட்டிகள் கூட இப்போதைய மனிதர்கள் மாதிரி சொங்கி போகாமலும் இருந்தார்கள். நானும் அவர்கள் மாதிரி சரியான உணவை எடுக்கிறேன். காலை சிற்றுண்டியாக ஓட்ஸ் மாதிரியான உணவு சாப்பிடுகிறேன். மதிய உணவாக சப்பாத்தி, கொஞ்சம் சாதம், காய்கறிகள் சாப்பிடுகிறேன். இரவு மீன், குறைவான எண்ணையில் வறுத்த காய்கறிகள் சாப்பிடுவேன். காரம், மசாலாவை தொட மாட்டேன். எனது சருமம் மினுமினுப்பாக இருப்பதாக சொல்கிறார்கள். அதற்காக தயிரில் எலுமிச்சை, தேன் கலந்து முகத்துக்கு பூசி சிறிது நேரத்துக்கு பிறகு வெந்நீரில் கழுவுவேன். அது முகத்தை பொலிவாக காட்டும். படப்பிடிப்பு இடையில் துணியில் சுற்றிய ஐஸை முகத்தில் ஒத்திக்கொண்டே இருப்பேன். அதனால் வெயிலில் வேலை செய்தாலும் பாதிக்காது. நடிகைகளுக்கு அழகு முக்கியம். தினமும் உடற்பயிற்சிகளும் செய்கிறேன். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் தன்னம்பிக்கை வரும். மகிழ்ச்சியே முகத்தை அழகாக காட்டும். ஆழ்ந்த தூக்கமும் அழகுக்கு முக்கியம்.'' இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com