வைரலாகும் சமந்தா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ

நடிகை சமந்தா நடித்துள்ள 'யசோதா' திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
வைரலாகும் சமந்தா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ
Published on

நடிகை சமந்தா நடிப்பில் தற்போது 'யசோதா' என்ற பான் இந்தியா திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இயக்குகிறார்கள். வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'யசோதா' படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ளார். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மார்த்தாண்டா கே வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

யசோதா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com