

இந்தியப் பெண்கள் அதிகமாகப் பயன்படுத்தும் உடைகளில் ஒன்று சுடிதார். அதிலும் நடுத்தர வயதினர், வேலைக்குச் செல்லும் பெண்கள், கல்லூரிக்குச் செல்லும் இளம் பெண்களின் முதல் சாய்ஸ் சுடிதார் தான். இந்த உடையை உடல் அமைப்புக்கு ஏற்ற வகையில் தேர்ந்தெடுத்து அணிவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
பருமனாக இருப்பவர்கள், அனார்கலி மற்றும் தொத்தி வகை சுடிதார்களையும், ஒல்லியாக இருப்பவர்கள் ஷரராஸ் மற்றும் சிகரெட்டி சுடிதார் வகைகளையும், உயரமாக இருப்பவர்கள் ஹரிம் சல்வாரையும், உயரம் குறைவாக இருப்பவர்கள் பலாசோ மற்றும் ஸ்டிரைட் சுடிதாரையும் தேர்ந்தெடுக்கலாம்.