இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் டிரைவர் வேலை... 545 பணியிடங்கள்

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் (ITBP) Constable (Driver) பணிக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் டிரைவர் வேலை... 545 பணியிடங்கள்
Published on

இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையில் (ஐ.டி.பி.பி.,) கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கான்ஸ்டபிள் (டிரைவர்) பிரிவில் 545 இடங்கள் உள்ளன.

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன டிரைவிங் லைசென்ஸ் அவசியம்.

வயது வரம்பு. 21 வயது முதல் அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: உடல் தகுதி தேர்வு, எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 செலுத்த வேண்டும்.ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கலாம்.எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.11.2024

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://recruitment.itbpolice.nic.in/rect/noticeboards/downloadpdf/307.pdf

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com