இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

394 பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Published on

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (IOCL) 394 பயிற்சி பணியிடங்களை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிகிரி, டிப்ளமோ படித்தவர்கள் மட்டுமின்றி 12-ம் வகுப்பு முடித்தவர்களும் பல்வேறு பதவிகளுக்கு தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் ஆசனூர், செங்கல்பட்டு, சென்னை, மதுரை, ராமநாதபுரம், திருச்சி ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:

பயிற்சி பணியிடங்கள் : 394

பயிற்சிகள் : டெக்னீஷியன் அப்ரெண்ட்டீஸ் , டிரேடு அப்ரெண்ட்டீஸ், டேட்டா எண்டரி ஆப்ரேட்டர், டொமஸ்டிக் டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் ஆகிய பதவிகளில் பயிற்சி வழங்கப்படுகிறது.

வயது வரம்பு : 31.01.2026 தேதியின்படி, வயது மற்றும் கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி : டெக்னீஷியன் பிரிவில் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், டெலிகம்யூனிகேஷன் மற்றும் இன்ஸ்ரூமெண்டேஷன் ஆகியவற்றில் உள்ள் இடங்களுக்கு மெக்கானிகல், ஆட்டோமொபைல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெகட்ரானிக்ஸ், இன்ஸ்ரூமெண்டேஷன், டெலிகம்யூனிகேஷன் ஆகியவை சார்ந்த டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் மற்றும் டொமஸ்டிக் டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் பதவிகளுக்கு 12-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்

இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆர்வமாக உள்ளவர்கள் முழு விவரங்களை https://iocl.com/apprenticeships என்ற இணையதளத்தில் பெற்றுகொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2026

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com