முதல் நாள் முதல் ஷோ பார்த்துடுவேன்... சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், ஆர்.ஆர்.ஆர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
முதல் நாள் முதல் ஷோ பார்த்துடுவேன்... சிவகார்த்திகேயன்
Published on

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் இரத்தம் ரணம் ரெளத்திரம் (ஆர்.ஆர்.ஆர்). பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும் போது, ராஜமவுலி இயக்கிய மகதீரா திரைப்படம் பார்த்ததிலிருந்து மிகப்பெரிய ரசிகன் ஆகிவிட்டேன். அப்புறம் ஈ படம் பார்த்து பிரமித்து போனேன்.

ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இவர்கள் இரண்டு பேரை புலி அல்லது சிங்கம் என்று சொல்லலாம். அந்தளவுக்கு திரையில் தெரிகிறார்கள். இவர்கள் இரண்டு பேர் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள். சுதந்திரம் வாங்க நிறைய பேர் இரத்தம் சிந்தினார்கள். அந்தளவிற்கு ஆர்.ஆர்.ஆர் படத்தில் உள்ளவர்கள் இரத்தம் சிந்தி உழைத்து இருக்கிறார்கள். நாம் அனைவரும் தியேட்டரில் படத்தை பார்ப்பது தான், அவர்களுக்கு நாம் தரும் மரியாதை. நான் முதல் நாள் முதல் ஷோவை பார்த்துடுவேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com